April 14, 2022
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
தாட்கோ மூலம் கோவை மாநகராட்சிக்குட்பட்ட வடவள்ளி அருகே மருதமலை ரோட்டில் கட்டப்பட்டுள்ள 5 வணிக வளாக கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்த பொது ஏலம் நடத்தப்பட உள்ளது. இந்த ஏலம் கோவை தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் 22ம் தேதி காலை 11 மணிக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் மற்றும் மாநகராட்சி மேற்கு மண்டலம் உதவி கமிஷனர் ஆகியோரால் நடத்தப்பட உள்ளது.
இந்த ஏலம் கோருபவர்கள் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக மட்டுமே இருத்தல் வேண்டும். கடை அமைந்துள்ள மாநகராட்சி பகுதியில் நிரந்தர குடியிருப்பு உடையவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.
இவ்வாறு கூறினார்.