June 19, 2017
தண்டோரா குழு
உலகிலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, தானாகவே இசையமைக்கும் ரோபோவை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்திலுள்ள ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தில் தானாகவே இசையமைக்கும் திறனுடைய ஷிமோன் என்னும் ரோபோவை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். கம்பிகளால் இணைக்கப்பட்ட மெல்லிய மரக்கட்டைகளை தட்டுவதன் மூலம் ஒளி எழுப்பும் இசைக்கருவி ‘மரிம்பா’ ஆகும். அந்த கருவியை பயன்படுத்தி இசை எழுப்புவதில் ஷிமோன் தேர்ச்சி பெற்றது.
பீத்தோவன் முதல் லேடி காகா போன்ற பிரபலங்கள் இசையமைத்த சுமார் 5௦௦௦ பாடல்கள் மூலம் ஷிமோனுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மனிதர்களால் இயற்றப்பட்ட இசையை புரிந்துக்கொள்ளவும், ஷிமோனின் இசை திறமைகளை பூர்த்தி செய்யவும், ஜார்ஜியா பல்கலைக்கழகம் மற்றும் மெசன் பிரெட்டன் என்னும் பி.எச்.டி மாணவரும் அதற்கு உதவி செய்தனர்.
“ஷிமோனுக்கு ஆராய்சியாளர்கள் பல மூலப்பொருட்களை கொடுத்துக்கொண்டே வரும்போது, அவர்களால் கண்காணிக்க முடியாத ஒரு வித்யாசமான இசை வரிசை முறையை உருவாகும் திறனுடையது. ஜாஸ் மற்றும் பாரம்பரிய இசையின் கலவையாக ஷிமோன் விளங்குகிறது” என்று மெசன் பிரெட்டன் தெரிவித்தார்.
பிரெட்டனின் ஆலோசகரும் “Georgia Tech Centre for Music Technology” இயக்குனருமான “Gil Weinberg” தான் ஷிமோனின் உண்மையான படைப்பாளி.ரோபோக்கள் இயற்றும் இசை அழகாகவுள்ளது என்று மனிதர்கள் உணருவார்களா? என்பதை கண்டறிய Gil Weinberg ஷிமோனை உருவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.