• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தாயின் சவப்பெட்டியில் என்னை அடக்கம் செய்யுங்கள்

March 22, 2017 தண்டோரா குழு

மரணத்தை நெருங்கிகொண்டிருக்கும் 7 வயது சிறுவன், தன் மரணத்திற்கு பிறகு தன்னுடைய தாயின் சவப்பெட்டியில் தன்னை அடக்கம் செய்யவேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளான்.

இந்த கோரிக்கை சமூக வலை தளங்கள் மூலம், உலகை உலுக்கும் வேண்டுகோளாக மாறியுள்ளது.

போலாந்து நாட்டைச் சேர்ந்த பியோட் குவாஸ்நீ அக்நீஸ்கா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவன் பிலிப். அவனுடைய தாயார் புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகி உயிரிழந்தார்.

7 வயது சிறுவனான பிலிப், லண்டனின் கோல்செச்ட்டர் நகரிலுள்ள பிரைர் கிருவ் ஆரம்ப பள்ளியில் கல்வி கற்று வந்தான். 2௦16-ம் ஆண்டு அவனும் புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகி லண்டன் கிரேட் ஒர்மொந்த் ஸ்ட்ரீட் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் அவன் தன்னுடைய மரணத்திற்கு பிறகு தன்னுடைய தாயின் சவப்பெட்டியில் தன்னை அடக்கம் செய்யவேண்டுமென்று தன்னுடைய கடைசி ஆசையை தெரிவித்தான்.

பிலிப்புக்கு தரப்பட்ட கீமோதெரபி, ஸ்டெம் செல் சிகிச்சை தோல்வியில் முடிந்தது. புற்றுநோய் அவன் குடை வரை பரவியிருப்பதாகவும், அவன் இன்னும் எத்தனை நாட்கள் உயிருடன் இருப்பான் என்று சொல்ல முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பின் தந்தை கூறுகையில், “அவன் குழந்தையாய் இருக்கும்போதே அவனுடைய தாய் இறந்துவிட்டாள். அதனால் அவளை எப்படி ஞாபகம் வைத்திருப்பான் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவன் நன்றாக பேசிக்கொண்டிருந்த வயதில் அவளுடைய கல்லறைக்கு சென்று பார்த்துள்ளான்.

அவனுடைய தாயின் உடலை வெளியே எடுத்து, அவர்கள் இவருடைய உடலையும் ஒன்றாக புதைக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும்” என்று வேதனையோடு கூறினார்.

பிலிப்பின் கடைசி ஆசையை நிறைவேற்ற மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். அதன்படி. மக்கள் உதவிய தொகை தற்போது வரை 37,௦௦௦ பவுண்ட் சேர்ந்துள்ளது.

மேலும் படிக்க