June 21, 2017
தண்டோரா குழு
சீனாவில் ரயிலில் பயணித்த தாயிக்கு அவருடைய மகன் தனது கையை தலையணையாக்கிய சம்பவத்தை பார்த்து மற்ற பயணிகள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சீனாவின் தென் மேற்கு மாகாணமான, சென்குடு பகுதியில் ரயிலில் ஒரு தாயும் மகனும் பயணம் செய்துக்கொண்டிருந்தனர்.அப்போது ரயில்நிலையத்தில் ரயில் நின்றபோது, ஒரு தாய் தன் குழந்தையுடன் ஏறியதைக் கண்ட அந்த சிறுவன், தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து, அந்த தாயிக்கு இடம் கொடுத்துவிட்டு, தன்னுடைய தாயின் அருகில் நின்றுகொண்டிருந்தான்.
அப்போது, களைப்பால் தன் தாய் தூங்குவதை பார்த்துள்ளான்.அப்படி அந்த சிறுவன், தன் தாயின் அருகில் நிற்கும் போது, தூங்கி வழிந்த தன் தாயின் கைப்பையை வாங்கி வைத்து கொண்டதோடு, தன் கையை, அவருக்கு தலையணையாக வைத்துள்ளான்.
அந்த சிறுவன் தன் தாயின் அருகில் நின்றுக்கொண்டு, தன் சிறிய கைகளை தாயிக்கு தலையணை வைத்திருப்பதை ரயிலிருந்த ஒருவர் புகைப்படம் எடுத்து, சீன இணையதளமான ‘வீபோ’வில் பதிவு செய்துள்ளார்.
மேலும் அந்த சிறுவனின் பெற்றோர் யார் என்று கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள். என் எதிர்கால மகளை அந்த சிறுவன் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று அவனிடம் நான் கேட்கவேண்டும்” என்று வீபோ இணையதள பயனாளி ஒருவர் தெரிவித்தார்.