May 2, 2017 தண்டோரா குழு
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கின் பிரபலமான தாய் ப்லோடிங் மார்க்கெட் என்ற இடத்தில் மகாகு இனத்தை சேர்ந்த குரங்கு ஒன்று வாழ்ந்து வந்தது.தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் தரும் உணவுகளை உண்டதால் அதிக எடையானது அந்த குரங்கு. தற்போது அந்த குரங்கின் எடையை குறைக்க வன விலங்கு அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
சாதாரணமாக குரங்கின் எடை, 8 கிலோவில் இருந்து 10 கிலோவுக்குள்தான் இருக்குமாம்.ஆனால் அந்த குரங்கின் எடை சுமார் 15 கிலோ.
சுற்றுலா பயணிகள் விட்டு செல்லும், தர்பூசிணி, இனிப்பு சோளம், நூடுல்ஸ், மில்க்ஷேக்ஸ் ஆகிய உணவுகளை உண்டு வாழ்ந்து வந்ததால் அந்த குரங்கு அதிக எடைக்கு ஆளானதாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
இது குறித்து தாய்லாந்து தேசிய பூங்காவின் வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு துறையின் மூத்த அதிகாரி காஞ்சனா நிட்டாயா கூறுகையில்,
“பாங்காக் நகரின் பங் க்ஹுன் தெயின் பகுதியில் அதிக எடையுடைய மகாகு இனத்தை சேர்ந்த குரங்கு இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நாங்கள் அங்கு சென்று, அந்த குரங்கிற்கு மயக்க ஊசி போட்டு பிடித்து, அதை நக்ஹோன் நயோக் மாகணத்திலுள்ள வனவிலங்கு மீட்பு மையத்திற்கு கொண்டு வந்துளோம். அங்கு அதற்கு உடல் எடையை குறைக்க உடற் பயிற்சிகள் கொடுக்கப்படும்.” என்றார்.
தாய்லாந்து நாட்டின் பிரபலமான தாய் பேஸ்புக் குழுவினர் கூறுகையில்,
“அந்த குரங்கிற்கு எந்த நோயும் இல்லை. வயதாகிவிட்டதால் அந்த குரங்கு எங்கயும் நகராமல் ஒரே இடத்தில் அமர்ந்து உணவுகளை உட்கொண்டுள்ளது. அதனுடைய தொப்பையின் கீழ் உணவுகளை மறைத்து வைத்திருப்பதால், குட்டி குரங்குகள் அதன் மேல் ஏறி விளையாடி வருகிறது.”” என்றனர்.