• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தாய்லாந்து பங்குச் சந்தையின் மிக முக்கியமான, மைல்கல் ஒப்பந்தமொன்றை கடும் போட்டிகளுக்கு மத்தியில் வென்ற கேஜிஐஎஸ்எல் நிறுவனம்

August 17, 2021 தண்டோரா குழு

உலகளாவிய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகள், டிஜிட்டல் தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் உலகளவில் முன்னணி வகிக்கும் நிறுவனமான கேஜிஐஎஸ்எல், தென்கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியத்தின் மிகப்பெரும் பங்குச் சந்தையாக திகழும் தாய்லாந்து பங்குச் சந்தையின் மிக முக்கியமான, மைல்கல் ஒப்பந்தமொன்றை கடும் போட்டிகளுக்கு மத்தியில் வென்றிருக்கிறது.

இதையடுத்து, கேஜிஐஎஸ்எல், தனது முதன்மை தயாரிப்பாக முன்னணி வகிக்கும், அதிநவீன அம்சங்கள் மற்றும், மிக உயர்ந்த தொழில்நுட்பத்துடான டால்ஃபின் டிஜிட்டல் தளத்தை தாய்லாந்தில் செயல்படுத்தும். டால்ஃபின் டிஜிட்டல் இயங்குதளமானது, வர்த்தகங்கள் நடைபெற அவசியமான அலுவலகப் பணிகளை மேற்கொள்ள உதவும் பேக் ஆபீஸ் இயங்குதளமாகும். கேஜிஐஎஸ்எல் இந்த இயங்குதளத்தை தாய்லாந்தின் பங்குச்சந்தை தரகர்களுக்காக வழங்க இருக்கிறது. அடுத்த 16 மாதங்களில் இத்தளத்தின் பணிகள் முடிவடைந்து, தனது செயல்பாடுகளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் டால்ஃபின் டிஜிட்டல் இயங்குதளமானது, மூதலீட்டு சந்தைகளுக்கான முதன்மை தயாரிப்பாக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும், இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனம் சார்ந்த பங்குச்சந்தை தரகர்களில் 60 பேருக்கு, அலுவலகம் சார்ந்த பணிகளான க்ளியரிங் மற்றும் செட்டில்மெண்ட் தொடர்பான செயல்பாடுகளை எளிய முறையில் மேற்கொள்ள உதவுகிறது.

இதன் தொடர்ச்சியாக, தாய்லாந்தில் உள்ள பங்குச்சந்தை தரகர்களுக்கு ஒரே தளத்தில் அனைத்து தீர்வுகளையும் வழங்கும் இயங்குதளமாக இந்த புதிய தயாரிப்பு உதவும். குறிப்பாக, ஈக்விட்டி, பத்திரங்கள், சில்லறை மற்றும் பெரு நிறுவன தரகர்களுக்கான ஆஃப் ஷோர் ட்ரேடிங் போன்றவற்றை ஒரே நேரத்தில் கையாளும் ஆற்றலை வழங்கும். அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திலான டால்ஃபின் இயங்குதளம், நாளொன்றுக்கு 5 மில்லியனுக்கு மேற்பட்ட வர்த்தகங்களை கையாண்டு வருவதன் அடிப்படையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தகங்கள் எந்நிலையிலும், எந்தளவிலும் வளர்ச்சிக்கண்டாலும், எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட அவற்றை சுலபமாக கையாளும் ஆற்றலையும் பெற்றிருப்பது இதன் தனித்துவமிக்க அம்சமாகும். மேலும், இதர உலகளாவிய இயங்குதளங்களுக்கு மத்தியில், டால்ஃபின் மிக அதிக கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம், இது சந்தையின் தேவைகளுக்கு ஏற்ற பொருத்தமான ஒன்றாகவும், மிக வலுவான செயல்திறன் மற்றும் பெரும் எண்ணிக்கையில் கையாளும் ஆற்றல் மற்றும் தானியங்கி முறையில் இயங்கும் அம்சங்களுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்து பங்குச் சந்தையின் தலைவர் டாக்டர் பகோர்ன் பீடதவாட்சாய் கூறுகையில்,

“தாய்லாந்து பங்குச்சந்தை தரகர்களுக்கு, அவர்களது வர்த்தகங்களுக்கான அலுவலகப் பணிகளில் புரட்சிகரமான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், மிகவும் நெறிப்படுத்தப்பட்ட, வலுவான உள்கட்டமைப்பை நிறுவவும் நாங்கள் மேற்கொண்டு வரும் லட்சிய முயற்சிகளில் ஒன்றாக இது அமைந்திருக்கிறது. கேஜிஐஎஸ்எல் மற்றும் தாய்லந்து பங்குச்சந்தை என எங்கள் இரு நிறுவனங்களுக்குமே சவாலான திட்டமாகவும் இது இருக்கிறது.

கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின், விரைவாக திட்டத்தை மேற்கொள்ளும் திறன் மற்றும் இதில் பங்கேற்கும் பங்குச்சந்தை தரகர்கள் மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வதில் காட்டும் தொடர்ச்சியான ஆதரவு ஆகியன இத்திட்டத்தின் வெற்றிக்கு பங்களிக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். என்றார்.

தாய்லாந்து பங்குச்சந்தை உடனான கூட்டு செயல்பாடு குறித்து கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் இயக்குனர் தலைமை நிர்வாக அதிகாரி பிரசாத் சண்முகம் கூறுகையில்,

“இது கேஜிஐஎஸ்எல் நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி. தற்போது வரையிலும், இந்தியச் சந்தையில் டால்ஃபின் சந்தேகத்திற்கு இடமில்லாமல் முதன்மையான தயாரிப்பாக முன்னணி வகித்து வருகிறது. இந்நிலையில் எங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த ஒப்பந்தம், இந்தியாவில் நாங்கள் மிக வலுவாக இருப்பதைப் போலவே, தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆசிய பசிஃபிக் பிராந்தியம் முழுவதிலும் வெற்றிப் பயணங்களை உருவாக்கும். எனவே செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், வணிக நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு ஆகிய நவீன அம்சங்களைச் சேர்க்க இருக்கிறோம். இதன் மூலம், டால்ஃபின் இயங்குதளத்தின் திறன்களை மேம்படுத்துவதில் அதிக முதலீடு செய்வதிலும் ஆர்வமாக உள்ளோம். கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் மீதும், எங்களது டால்ஃபின் இயங்குதளத்தின் மீதும் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கும் தாய்லாந்து பங்குச் சந்தையின் தலைவர் டாக்டர். பீடதவாட்சாய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

மேலும் படிக்க