June 30, 2017 தண்டோரா குழு
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை எதிர்த்து திங்கள்கிழமை முதல் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படும் என தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவுள்ளது.இதனால் தியேட்டர்களில் டிக்கெட் விலை கட்டணங்கள் அதிகரிக்க உள்ளன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன்,
58 முதல் 62% வரியை தாங்க முடியாது.சினிமா டிக்கெட் விலை கடுமையாக உயரும். இதனால் ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்த்து திங்கள்கிழமை முதல் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படும். எங்களுடைய கோரிக்கைகளை ஏற்று வரிவிலக்கு அளிக்கவில்லை எனில் திரையரங்குகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.
மேலும், கேளிக்கை வரியுடன் ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டுமா என்பது குறித்து அரசிடம் இருந்து தெளிவான விளக்கம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.