March 3, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 57க்குட்பட்ட ஒண்டிப்புதூர், பட்டணம் இட்டேரி சாலையிலுள்ள திட வள மேலாண்மை மையத்தை தமிழக முதலமைச்சர் 2021ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி துவக்கி வைத்தார்.
இந்த மையத்தை மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு மையத்திலுள்ள தோட்டக்கழிவுகள், திட வள கழிவுகள், மக்கும் கழிவுகள் மற்றும் மக்கும் கழிவுகளை கொண்டு உற்பத்தி செய்யப்படும் உரங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கிழக்கு மண்டல இளம் பொறியாளர் ராஜேஸ் வேணுகோபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.