September 1, 2017
தண்டோரா குழு
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற விவகாரத்தில் சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேருக்கு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து, தங்கதமிழ்செல்வன் மற்றும் ஏழுமலை ஆகியோர் நேற்று முன்தினம்(ஆகஸ்ட் 30) சட்டசபை செயலரை சந்தித்து விளக்கம் அளித்திருந்தனர்.
இந்நிலையில், செப்., 5 க்குள் முழுமையாக விளக்கத்தை அளிக்க வேண்டும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அளித்த விளக்கத்தை இடைக்கால பதிலாகவே கருதப்படும் எனக்கூறியுள்ளார்.