April 25, 2017
தண்டோரா குழு
இரட்டை இலை சின்னம் பெற தினகரன் – சுகேஷ் தொலைபேசி பேச்சு உரையாடல் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் தர முயன்ற விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இன்று போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து சுகேசை மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்தனர். ஆனால்3 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
அப்போது நீதிபதி,தினகரன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.அதற்கு போலீசார்,தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி மட்டுமே விசாரணை நடத்தி வருகிறோம் எனக்கூறினர்.மேலும்,தினகரன் – சுகேஷ் தொலைபேசி பேச்சு உரையாடல் ஆதாரங்களை டில்லி நீதிமன்றத்தில் போலீசார் சமர்ப்பித்தனர்.