August 12, 2017
தண்டோரா குழு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை 420 என டிடிவி தினகரன் சொல்லியது வாய்தவறி வந்த வார்த்தைகள் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.
கோவையில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
டிடிவி தினகரன் வாய்த்தவறி பேசிய வார்த்தைகளை பெரிதுபடுத்த வேண்டாம். 420 என கூறியதற்கு அவரே விளக்கம் அளித்துவிட்டார் என்றார்.மேலும்,அதிமுகவில் நடப்பது அண்ணன்-தம்பி சண்டை என்றும், விரைவில் இதற்கு தீர்வு ஏற்படும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.