November 10, 2022 தண்டோரா குழு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. காலநிலை மாற்றம் காரணமாக மிகவும் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் சளி, காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும், பருவமழை தாக்கம் காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. இதனை அடுத்து மாநகராட்சி பகுதிகளில் தினமும் 1000 பேருக்கு சளி, காய்ச்சலி பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாள்தோறும் பொது இடங்கள், வார்டு பகுதிகளில் 1000 பேரிடம் சளி, காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.