June 15, 2017
தண்டோரா குழு
திருநங்கைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
தமிழகச் சட்டப்பேரவையின் இன்றையக் கூட்டத்தில் கல்வித்துறை மானியக்கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
அப்போது, பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்,
நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில், அனைத்து பாடப் பிரிவுகளிலும் திருநங்கைகளுக்கு கட்டணம் ஏதும் இல்லாமல் இலவச கல்வி வழங்கப்படும்.மேலும் கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு மாதம்தோறும் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும். என்று தெரிவித்துள்ளார்.