July 3, 2017 தண்டோரா குழு
திருநங்கைகளுக்கு இலவசகல்வி வழங்கப்படும் என்று இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நம் நாட்டில்ஆண், பெண் பாலர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பும் சலுகையும்திருநங்கைகளுக்கு கிடைப்பதில்லை.
இதனால், பெரும்பாலான திருநங்கைகள் வேறுவழியின்றி பிச்சை எடுத்தும், பாலியல்தொழிலில் ஈடுபட்டும் வருகின்றனர். குறிப்பாக அவர்களை யாரும் மதிப்பதுகூட இல்லை.எனினும், நாட்டில் ஆங்காங்கே சில திருநங்கைகள் மட்டும் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.
நம் நாட்டில் பல இடங்களில் பெண்களுக்கான கல்வியே மறுக்கப்பட்டுவரும் நிலையில், திருநங்கைகளுக்கு மேற்படிப்பை இலவசமாக வழங்க இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.பல்கலைக்கழகத்தின் நிறுவன துணைவேந்தர் ஜி.ராம் ரெட்டி நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பு வகிக்கும் ரவீந்தர குமார் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
அதில், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்வழங்கி வரும் அனைத்து விதமான பாடப்பிரிவுகளிலும் திருநங்கைகளுக்கு முழுக்க முழுக்க இலவசமாக கல்வி வழங்கப்படும் என்றும், எந்தவொரு பாடப்பிரிவிலும் திருநங்கை சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய திறந்தநிலைப்பல்கழைக்கழகமான இந்திரா காந்தி தேசியதிறந்தநிலைப்பல்கலைக்கழகம் திருநங்கை சமுதாயத்தினரிடம் கல்வி குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையிலும், உயர்கல்வியில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.