April 25, 2017 தண்டோரா குழு
விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்காவிட்டால் வரும் மே 25 முதல் தில்லியில் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், பயிர்கடன் மற்றும் விவாசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தலைநகர் தில்லி
ஜந்தர் மந்தரில், போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகள், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் செவ்வாய்க்கிழமை காலை சென்னை வந்து சேர்ந்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு கூறுகையில்,
தில்லியில் போராட்டம் நடத்திய போது கொலை வழக்கு போடுவோம் என மிரட்டல்கள் வந்ததாகவும். கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார். மேலும் தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவு காரணமாக 15 நாட்களில் முடிவு சொல்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதற்கு முடிவு கிடைக்காவிட்டால் மே 25 முதல் தில்லியில் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.
இந்நிலையில் சென்னை வந்திறங்கிய விவசாயிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே மத்திய அரசு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.