• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் தென்னிந்திய மாதிரி ஐ.நா. சபை கருத்தரங்கம் துவக்கம் !

April 1, 2024 தண்டோரா குழு

தென்னிந்திய மாதிரி ஐ.நா.சபை , கோவையில் அமைந்துள்ள தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் இன்று தொடங்கியது. தென்னிந்திய மாதிரி ஐ.நா. சபை நிகழ்வில் சி.ஆர்.பி.எப் கோவை துணை ஆணையர் ராஜேஷ் டோக்ரா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் சோனாலி கீட் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோர் இணைந்து திருவிளக்கை ஏற்றி விழாவைத் தொடங்கினர்.இந்தியன் பப்ளிக் பள்ளியின் தலைமை நிர்வாக அலுவலர் தாரா மோகன் ராஜேஷ் டோக்ராவுக்கு சிறப்பு செய்தார்.இந்நிகழ்வை தலைமை இயக்குனர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

தென்னிந்திய மாதிரி ஐ.நா.சபை என்பது நம் உலகோரை நன்னெறிப்படுத்தும் நோக்கத்தில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட சிறந்தவொரு மாதிரி ஐ.நா. சபை ஆகும்.6ஆம் வகுப்பு முதல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நம்மைச் சுற்றியுள்ள உலகில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களுக்கான தீர்வுகளை முன்மொழியவும் விவாதிக்கவும் ஒரு தளத்தை வழங்குகிறது. இந்த மாதிரி ஐ.நா.சபை ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் மற்றும் சூழலை துல்லியமாக பிரதிபலிப்பதன் மூலம் மாணவர்களுக்கு அரசாளுமை நிறைந்த உரையாடலில் ஈடுபடுவதற்கும், தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்கும் , பொது வெளியில் பேசும் திறன், ஆராய்ச்சி திறன்,சொல்லாட்சித்திறன், மாணவர்களின் ஒத்துழைப்பு மற்றும் சமரசத்தின் மதிப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு பெருவாய்ப்பாக இந்த மாதிரி ஐ நா சபை அமைகிறது.

மூன்று நாள் கருத்தரங்கம் இளைஞர்களின் கண்ணோட்டத்தில் உலகளாவிய சிக்கல்களுக்கு தீர்வு காணவும்,இன்று நாடுகள் எதிர்கொள்ளும் அரசியல்,சமூக – பொருளாதார,சுற்றுச்சூழல் மற்றும் பிற சிக்கல்களுக்கு அகிம்சை வழியில் தீர்வுகளைத் தேடுவதற்கான ஒரு மன்றமாக அமைகிறது.

ராஜேஷ் டோக்ரா தொடக்க உரையில்,

உலக விழிப்புணர்வை உருவாக்க மாணவர்கள் மேற்கொண்ட முன்முயற்சியை பெரிதும் பாராட்டினார்.மாணவர்களின் விழிப்புணர்ச்சியே பல சிக்கல்களுக்கான தீர்வு என்று அவர் நம்பினார். எனவே , அவர்களின் கண்களால் உலகைக் காண்பதும், அவர்களின் கருத்துக்களை வெளியிட ஒரு தளத்தை வழங்குவதும் , மாணவர்கள் சமூகத்திற்கு பொறுப்பான மற்றும் அக்கறையுள்ள தனிநபர்களாக மாற வேண்டும் என்ற பார்வையையும் பாராட்டினார்.

தென்னிந்தியா முழுவதிலும் இருந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை சார்ந்த 1200 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய தென்னிந்திய மாதிரி ஐக்கிய நாடுகள் சபை கருத்தரங்கை IBDP மாணவர்கள் ஒருங்கிணைக்கிறார்கள்.ஏப்ரல் 1 முதல் 3 , வரை மூன்று நாள் நிகழ்வில் 12 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் ஈடுபடுவார்கள்.ஜி 20 ,யுனெஸ்கோ,யுஎன்எச்ஆர்சி,டபிள்யூஎச்ஓ , யுஎன்எஸ்சி,நேட்டோ மற்றும் டபிள்யூஎச்சி ஆகியவை 40 முக்கிய குழுக்களுள் குறிப்பிடப்படத்தக்கவை ஆகும். தென்னிந்திய மாதிரி ஐ.நா.சபை வாழ்க்கை சூழல்களுக்கும்,கூட்டணி மற்றும் நட்புறவுகளை வளர்ப்பதற்கும் முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் பங்கேற்பாளர்களை மென்மேலும் வளரச்செய்கிறது.

இன்று உலகின் எந்த ஒரு பகுதியிலோ அல்லது நாட்டிலோ வாழும் மக்களுக்கு தங்களது வாழ்வு குறித்த அச்சமும் , சவால்களும், நெருக்கடிகளும் உண்டாகுமேயானால் அம்மக்கள் , அவர்களுக்கான நம்பிக்கை,உதவி , தலைமை மற்றும் ஒருங்கிணைப்புக்காக ஒரு அமைப்பை நாடுகிறார்கள்.அதுவே ஐக்கிய நாடுகள் சபை அத்தகைய அனுபவத்தை தென்னிந்திய மாதிரி ஐ.நா.சபை கொணர்ந்தது அரசாளுமை திறன்கள் மூலம் சிக்கல்களை தீர்க்கும் வல்லமையுடைய உலகளாவிய தலைவர்களை வளர்க்கிறது.

மேலும் படிக்க