• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தி.மு.க. என்ற நச்சு மரத்தை, ‘வளர்ச்சி’, ‘தேச ஒற்றுமை’ கோடாரி கொண்டு வீழ்த்துவோம் – வானதி ஸ்ரீனிவாசன்

September 27, 2022 தண்டோரா குழு

பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன்வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பினரின் வீடு, அலுவலகங்களில், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பினர் சோதனை நடத்தியதை தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக, தமிழகம் முழுவதும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்கள், கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதற்கு காவல் துறைக்கும் பொறுப்பு வகிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.

பெட்ரோல் குண்டு வீசிய காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் 15-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்பது முதல்வருக்கு தெரியாமல் இருக்க முடியாது.

ஆனாலும்,இது குறித்தெல்லாம் ஒரு வார்த்தை கூட கூறாமல், ஒரு சொல் கூட கண்டிக்காமல், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் சில அரசியல் சக்திகள் பாடுபட்டு கொண்டிருக்கின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்பட்டு கொண்டிருக்கும் அந்த நச்சு சக்திகளுக்கும் இடம் கொடுக்காமல் நம் பயணத்தை தொடர வேண்டும்” என, தி.மு.க.வினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தீய நோக்கத்துடன் செயல்படும் நச்சு சக்தி, தமிழகத்தில் தி.மு.க.தான். குடும்ப அரசியல், ஊழல் இரண்டும் தி.மு.க.வின் இரு கண்கள். தங்களை எதிர்ப்பவர்களை நாகரிகமின்றி ஆபாசமாக விமர்சிப்பதை தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாக புகுத்தியவர்கள் தி.மு.க.வினர் என்பது அனைவருக்கும் தெரியும். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கூட ஆபாசமாக விமர்சித்தவர்கள் தி.மு.க. தலைவர்கள்.

தீய நோக்கத்துடன் செயல்படும் நச்சு மரமாக வளர்ந்துள்ள தி.மு.க.வை, வளர்ச்சி, தேச ஒற்றுமை என்கிற கோடாரி கொண்டு வீழ்த்த பா.ஜ.க. முனைந்திருக்கிறது. கண்டிப்பாக தி.மு.க. என்ற நச்சு மரத்தை, வளர்ச்சி, ஒற்றுமை என்ற கோடாரி கொண்டு பா.ஜ.க., வீழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.

எனவே, பா.ஜ.க. வளர்வதை கண்டு பொறுக்க மாட்டாமல், வீண் ஜம்பம் அடிப்பதை விட்டுவிட்டு, தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கை காப்பாற்ற உறுதியுடன் நடவடிக்கை எடுங்கள். பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டறிந்து, இந்த வன்முறை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க காவல் துறையை பயன்படுத்துங்கள். இல்லையெனில் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க