February 22, 2017 தண்டோரா குழு
நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் பிப்ரவரி 18 -ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவில் எடப்பாடி கே. பழனிச்சாமி வென்றார். அதையடுத்து தமிழக முதலமைச்சராக அவர் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தி.மு.க. உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு முறையைப் பின்பற்றக் கோரி சட்டப் பேரவைத் தலைவருக்குக் கோரிக்கை விடுத்தனர். அதை அவர் ஏற்க மறுத்தார். அதையடுத்து, சட்டப் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. அதன் பின் தி.மு.க. உறுப்பினர்களை சட்டப் பேரவையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த திங்கள்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது, மீண்டும் பிப்ரவரி 27- ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.