October 30, 2021 தண்டோரா குழு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு, இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
தீபாவளியை முன்னிட்டு ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பயணிகளின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கோவை நாகர்கோவில் சிறப்பு ரயில்( எண்: 02668), அக்டோபர் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை 2 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள், ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டி என மொத்தம் 3 கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படும்.
நாகர்கோவில் கோவை சிறப்பு ரயில்( எண்: 02667) அக்டோபர் 31 ஆம்ம தேதி முதல் நவம்பர் 9 ஆம் தேதி வரை 2 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள், ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டி என மொத்தம் 3 கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படும். கோவை மன்னார்குடி சிறப்பு ரயில் ( எண்: 06616) மற்றும் மன்னார்குடி கோவை சிறப்பு ரயில்( எண்: 06615) நவம்பர் 2 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டியுடன் இயக்கப்படும்.
கோவை – மயிலாடுதுறை ஜன் சதாப்தி சிறப்பு ரயில்( எண்:02084) மற்றும் மயிலாடுதுறை – கோவை ஜன் சதாப்தி சிறப்பு ரயில்( எண்: 02083) நவம்பர் 1, 2,3 மற்றும் 7 ஆம் தேதிகளில் கூடுதலாக 2 இரண்டாம் ஆம் வகுப்பு சேர் கார் பெட்டிகளுடன் இயக்கப்படும். கோவை – சென்னை இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி சிறப்பு ரயில் ( எண்: 02680), சென்னை – கோவை இன்டர்சிட்டி சிறப்பு ரயில் ( எண்: 02679) நவம்பர் 3 மற்றும் 7 ஆம் தேதிகளில் ஒரு இரண்டாம் வகுப்பு சேர் கார் கூடுதல் பெட்டியுடன் இயக்கப்படும்.
கோவை – ராமேசுவரம் வாராந்திரச் சிறப்பு ரயில்( எண்: 06618) நவம்பர் 2 ஆம் தேதியும், ராமேசுவரம் } கோவை வாராந்திரச் சிறப்பு ரயில்( எண்: 06617) நவம்பர் 3 ஆம் தேதியும் ஒரு பொது இரண்டாம் வகுப்பு கூடுதல் பெட்டியுடன் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.