January 17, 2017 தண்டோரா குழு
எகிப்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 8 காவல்துறையினர் உயிரிழந்தனர். பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர்.
” தென் மேற்கு எகிப்தின் புதிய பள்ளத்தாக்கு கோவேர்நோரடேவில் என்னும் பகுதியில் இருந்து 7௦ கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சார்கா நகர். அங்கு அல் நாக்ப் சோதனை சாவடி உள்ளது.
திங்களன்று காவல்துறையினர் அந்த சோதனை சாவடி வழியாக செல்லும் வாகனங்களை சோதனை செய்துக்கொண்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 8 காவல்துறையினர் உயிரிழந்தனர் 3 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். துப்பாக்கி சண்டையில் தப்பி சென்ற தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுபேற்கவில்லை.” என எகிப்தின் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
2௦11ம் ஆண்டு எகிப்தில் நடந்த புரட்சிக்கு பிறகு குடியரசு தலைவர் ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து எகிப்து நாட்டில் பல தாக்குதல்கள் நடந்தது வருகிறது.
எகிப்தில் முன்னாள் அதிபர் மோர்சி, கடந்த 2௦13ல் பதவியிறக்கம் செய்யப்பட்டதையடுத்து காவல்துறை மற்றும் ராணுவத்தை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.