September 21, 2022
தண்டோரா குழு
கோவை துடியலூரில் அழகு நிலைய ஊழியர் பிரபுவின் துண்டிக்கப்பட்ட கை கிடைத்த வழக்கு – உடல் துடியலூர் சந்தை அருகே உள்ள கிணற்றில் மேலும் உடலில் உறுப்புகள் கண்டறியப்பட்டதுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் துடியலூர் வெள்ளகிணறு பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் ஆணின் இடது கை கண்டறியப்பட்டது.மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அழகு நிலைய ஊழியர் பிரபு என்பவரது கை தான் என உறுதியானது.
இந்நிலையில் விசாரணை தீவிரபடுத்தப்பட்ட நிலையில் இறந்த பிரபுவின் உடல் பாகங்கள் துடியலூர் சந்தை அருகே உள்ள கிணற்றில் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.