• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துடியலூரில் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது !

January 3, 2022 தண்டோரா குழு

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற வடமாநில இளைஞர்கள் இருவரை துடியலூர் போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை துடியலூர் அருகே உள்ள ராக்கிப்பாளையம் பிரிவில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்துக்குள் நள்ளிரவு 2 மணியளவில் 2 வாலிபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர் ஏ.டி.எம். எந்திரத்தின் கதவை திறந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இந்த தகவல் மும்பையில் உள்ள வங்கி அலுவலகத்துக்கு சென்றது.

உடனடியாக வங்கி அதிகாரிகள் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் திறந்து இருந்தது. இதனையடுத்து மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 வாலிபர்கள் குடிபோதையில் தள்ளாடியபடி ஏ.டி.எம். எந்திரத்தை திறக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதில் பதிவான காட்சிகளை வைத்து அந்த பகுதி முழுவதும் போலீசார் தேடினர்.

அப்போது ஏ.டி.எம். மையத்துக்கு அருகிலேயே 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் அருகே போலீசார் சென்று பார்த்த போது அவர்கள் தான் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது. பின்னர் போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்திரசேகர் (வயது 24), பிருந்தாவன் பாகரதி (26) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் 2 பேரும் நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது.

இவர்கள் ஏ.டி.எம். மையத்துக்கு அருகிலேயே அறை எடுத்து தங்கி உள்ளனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தனர். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் அறைக்கு செல்லும் வழியில் ஏ.டி.எம். மையத்தை திறந்து கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது. விசாரணை முடிந்ததும் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க