December 30, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில் டெங்கு களப்பணியாளர்கள் மூலம் வீடுகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி
கமிஷனர் தெரிவித்ததாவது:
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும்
தண்ணீர் சேமித்து வைக்கும் சிமெண்ட் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் போட்டு தூய்மைப்படுத்திட வேண்டும். டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம்செய்பவை. ஆகையால் நல்ல நீர் தேங்கும் வாய்ப்பு உள்ள தேவையற்ற பொருட்களான பிளாஸ்டிக் டப்பாக்கள், பூச்செடிகள்,பெயிண்ட் டப்பாக்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்திட வேண்டும்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 2வது வார்டு துடியலூர் முருகன்நகர் பகுதியில் உள்ள ஜி.ராமமூர்த்தி கட்டுமான தொழிலாளர்கள் குடியிருப்பில் அதிகப்படியான லார்வா கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டதன் காரணமாகவும்,டெங்கு காய்ச்சல் பரப்ப காரணமாக இருந்ததாலும் மாநகராட்சி அதிகாரிகளால் ரூ.50,000அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.