• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துடியலூர் சுற்று பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

August 3, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் இன்று மேட்டுப்பாளையம் சாலை துடியலூர், வெள்ளகிணறு, ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி வருகின்ற சனிக்கிழமை மேட்டுப்பாளையம் சாலை ஜி.என் மில் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள தனியார் வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து துடியலூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரடியாக சென்று அங்குள்ள வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் வெள்ளக்கிணறு பகுதியில் ஆதி அறக்கட்டளை திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் கலைஞரின் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி துணை ஆணையர் சிவகுமார், வட்டாட்சியர் தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க