December 12, 2022
தண்டோரா குழு
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.14-க்குட்பட்ட துடியலூர், வி.சி.எஸ் நகர் பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அப்பகுதிகளை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் சித்ரா, உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி பொறியாளர்கள் ஜெயன்ராஜ், குமரேசன், மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.