July 18, 2017 தண்டோரா குழு
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வெங்கையா நாயுடு, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதியோடு முடிவடைகிறது.இதனையடுத்து புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தி பேரன் கோபாலகிருஷ்ண காந்தியும், பா.ஜ.க கூட்டணி சார்பில் வெங்கைய்யா நாயுடுவும் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க, சார்பில் அறிவிக்கப்பட்ட வெங்கைய்யா நாயுடு, பிரதமர் மோடி, அமித் ஷா, பா.ஜ.,மூத்த தலைவர் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் முன்னிலையில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.