August 21, 2017
தண்டோரா செய்திகள்
தமிழகத்தின் துணை முதலமைச்சராக பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இரு அணிகளும் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இணைந்தது.
இரு அணிகள் இணைப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது தமிழகத்தின் துணை முதலமைச்சராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
துணை முதலமைச்சராக பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வதிற்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.மேலும், வரும் காலத்தில் வளர்ச்சியில் தமிழகம் புதிய உச்சத்தை தொடும் எனவும் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.