December 15, 2017 தண்டோரா குழு
துபாயில் ஓட்டங்களுக்கு என்று ஒரு தனி மருத்துவமனை தொடங்கப் பட்டுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான துபாயில் உள்ள மர்மௌம் என்னும் இடத்தில், சுமார் 10.9 மில்லியன் டாலர் செலவில் ஒட்டகங்களுக்கு என்று ஒரு தனி மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மருத்துவமனையில், அறுவை சிகிச்சை அறை, எக்ஸ்ரே அறை, எம்ஆர்ஐ ஸ்கேன் அறை, கேட் ஸ்கேன் அறை ஆகியவை நவீன முறை மூலம் ஒட்டகங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதை தவிர, சுமார் 2௦ ஒட்டகங்களுக்கு சிகிச்சை தரகூடிய சர்வதேச கால்நடை மருத்துவர்களை கொண்ட குழு, அந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர். ஒரு அறுவை சிகிச்சைக்கு 1,௦௦௦ டாலர், எக்ஸ்ரே மற்றும் அல்ட்ராசவுண்ட் செய்ய 11௦ டாலர்களில் இருந்து தொடங்குகிறது.
இது குறித்து அந்த மருத்துவமனையின் இயக்குனர் கூறும்போது,
“நாம் ஒட்டகங்களை வளர்க்கவோ அல்லது அதன் இனத்தை பெருக்கவோ மட்டும், அதை கவனித்து கொள்ளகூடாது. அதற்கு தேவையான மருத்துவ பராமரிப்பு அளித்து, அதை கவனித்து கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.