January 28, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டம் புறநகர் பகுதியில் துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் தங்கள் துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டிற்கான (2022) உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது. ஆகையால் கோவை மாவட்டம் புறநகர் பகுதியில் துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் தங்கள் துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, அங்கீகாரம் பெற்ற துப்பாக்கி பாதுகாப்பு கிடங்கியோ தவறாது இருப்பு வைக்க வேண்டும். இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதிபடுத்தவேண்டும்.
மத்திய மாநில காவல் பணியில் உள்ளவர்கள் வங்கி துறையில் பாதுகாப்பு பணியில் உள்ள ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களுக்கு இந்த தடை உத்தரவிரலிருந்து விளக்கு அளிக்கப்படுகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.