• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென்னிந்திய அளவிலான பாராவாலிபால் போட்டி தமிழ்நாடு அணி வெற்றி !

September 12, 2022 தண்டோரா குழு

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் டவுன்டவுன் (Rotary Club of Coimbatore Towntown) சார்பில் 5 மாநிலங்களுக்கு இடையேயான தென்னிந்திய அளவிலான பாராவாலிபால் மற்றும் த்ரோபால் போட்டி மறைந்த ரோட்டரி சங்க உறுப்பினர் ரோட்டேரியன் டாக்டர். கிருஷ்ணானந்தா நினைவாக கிருஷ்ணானந்தா நினைவு கோப்பை என்ற பெயரில் நடைபெற்றது.

ராமகிருஷ்ணா மிஷன் வித்யலாயா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்ப்போட்டியை ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன்டவுன் உடன் இணைந்து ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா எடுகேஷனல் அண்டு ரிசர்ச் இன்ஸ்டியூட்இ இந்தியன் பாராஒலிம்பிக் வாலிபால் அசோசியேசன் மற்றும் பாரா த்ரோபால் பெடரேஷன் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து நடத்தியது.

இது குறித்து ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் டவுன்டவுன் (Rotary Club of Coimbatore Towntown) திட்ட தலைவர் ரொட்டேரியன் காட்வின் மரியா விசுவாசம் கூறுகையில்,

கடந்த நான்கு ஆண்டுகளாக இப்போட்டிகள் கோவையில் மாவட்ட அளவில் நடைபெற்று வருகின்றன. இம்முறை இப்போ போட்டிகள் மாநிலங்களுக்கு இடையே நடைபெற்றது. வரும் ஆண்டுகளில் தேசிய அளவில் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.இப்போட்டியில் பங்குபெறும் வீரர்கள் ஒரு அணிக்கு 10 நபர்கள் விளையாடுவார்கள் இதில் 6 வீரர்கள் களத்திலும் மற்ற 4 வீரர்கள் சப்சியூட் ஆகவும் இருப்பார்கள். இவர்களுக்காக சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானத்தையும் ஆங்கீகரிக்கப்பட்ட நடுவர்களையும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சாரிபில் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்களுக்கு இடையேயான தென்னிந்திய அளவிலான பாராவாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகளை ரோட்டரி மாவட்டம் 3201-ன், 2024 –2025 ஆண்டுக்கான ஆளுனராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோவையின் பிரபல வழக்கறிஞர் ரோட்டேரியன் எகேஎஸ் என். சுந்தரவடிவேலு துவக்கிவைத்தார். கௌரவ விருந்தினராக அர்ஜுனா விருது பெற்ற எம். மகாதேவா மற்றும் வீல்சேர் பென்சிங் பெடரேஷன் ஆஃப் இந்தியா பொது செயலாளரும் பாதர் ஆஃப் பாரா ஒலிம்பிக்ஸ் என அழைக்கப்படுபவருமான ஜெ.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளார்களாக பாரா த்ரோபால் பெடரேஷன் ஆஃப் இந்தியா தலைவரும் முதுநிலை பாரா வீரருமான ஆர். ராமச்சந்திரன் மற்றும் பொது செயலாளரும் மாநில விருது பெற்றவருமான ஆர்.மஞ்சுநாத், ரோட்டரி மாவட்டம் 3201 சமூக சேவை மாவட்ட தலைவர் ஆர். எஸ். மாருதி, மண்டலம் 5, மாவட்ட இயக்குனர் ஆர். மயில்சாமி, ரோட்டரி மாவட்டம் 3201 – மண்டலம் 5 – ன், உதவி ஆளுனர் சுமித் குமார் பிரசாத், புபுசு ராகேஷ் குமார் ரங்கா, கலந்து கொண்டனர்.

இந்திய பாரா ஒலிம்பிக் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட இந்த பாராவாலிபால் போட்டியில் ஆண்களும், த்ரோபால் போட்டியில் பெண்களும் பங்கேற்று உள்ளனர். இந்த போட்டியில் 5 மாநிலங்களை சேர்ந்த அணியினர் பங்கேற்று விளையாடினர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சோரி மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பங்கு பெற்று விளையாடும் வீரர்கள், அவர்கள் எடுக்கும் புள்ளிகள் தேசிய அளவில் நடைபெறும்அவர்களின் தேர்வுக்கு இந்த புள்ளிகள் தகுதியாக சேர்த்துக் கொள்ளப்படும்.

முன்னதாக இந்த போட்டியின் துவக்கமாக சரவணம்பட்டியில் காலை 8.00 மணிக்கு – ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் டவுன்டவுன் செயலாளர் குமரன் அலுவலகத்திலிருந்து தலைவர் என். ஜே. சுந்தரேஷன் கொடியசைத்து இந்த போட்டிக்கான ஜோதியை துவக்கிவைத்தார். இந்த ஜோதியானது காலை 9.30 மணிக்கு ராமகிருஷ்ணா மிஷன் வித்யலாயா உள் விளையாட்டு அரங்கிற்கு வந்து சேர்ந்தது. இதை ராமகிருஷ்ணா மிஷன் வித்யலாயா உள் விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிளான ஜோதியில் எம். மகாதேவா பெற்றுக்கொண்டு ஜோதி ஏற்றினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலையில் நடைபெற்ற பாரா வாலிபால் ஆண்கள் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியை எதிர்த்து புதுச்சேரி அணியினர் விளையாடினார். இதில் தமிழ்நாடு அணி வெற்றிபெற்றது.இரண்டாவதாக நடைபெற்ற பெண்கள் த்ரோபால் இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியை எதிர்த்து தமிழ்நாடு அணியினர் விளையாடினார். இதில் அணி கர்நாடகா அணி வெற்றிபெற்றது.

இதில் வெற்றிபெற்ற பாரா வாலிபால் ஆண்கள் தமிழ்நாடு அணிக்கு முதல் பரிசும், இரண்டாம் பரிசு பெற்ற ஆந்திரா மாநில அணிக்கு இரண்டாம் பரிசும் மூன்றாம் இடம் பெற்ற புதுச்சேரி அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இவர்களுக்கு ரோட்டேரியன் டாக்டர். கிருஷ்ணானந்தா நினைவு கோப்பை, இந்திய வாலிபால் பாரா அசோசியேசனால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது. மேலும் ஆண்கள் அணிக்கான சிறந்த விளையாட்டு வீரராக தமிழ்நாடு அணியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதே போல் பெண்கள் த்ரோபால் போட்டியில் வெற்றி பெற்ற கர்நாடகா அணிக்கு முதல் பரிசும், இரண்டாம் பரிசு பெற்ற ஆந்திரா அணிக்கு இரண்டாம் பரிசும் மூன்றாம் இடம் பெற்ற தமிழ்நாடு அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவர்களுக்கு டாக்டர் கிருஷ்ணானந்தா நினைவு கோப்பை மற்றும் இந்திய வாலிபால் பாரா அசோசியேசனால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு தொகை வழங்கப்பட்டது. பெண்கள் பிரிவில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக கர்நாடகா மாநில அணியைச் சேர்ந்த டீ கீதா தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இந்த பரிசுகளை ரோட்டரி கிளப் ஆஃப் டவுன்டவுன் தலைவர் என்.ஜெ. சுந்தரேசன், வழங்கினார். அப்போது உடன் செயலளார் குமரன் பொருளாளர் விக்னேஷ், திட்ட தலைவர் காட்வின் மரியா விசுவாசம் மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் உறுப்பினர்கள், ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா எடுகேஷனல் அண்டு ரிசர்ச் இன்ஸ்டியூட் சார்பில் டாக்டர் கிரிதரன், இந்தியன் பாராஒலிம்பிக் வாலிபால் அசோசியேசன் மற்றும் பாரா த்ரோபால் பெடரேஷன் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மேலும் படிக்க