November 3, 2022 தண்டோரா குழு
எந்த பக்க விளைவிகளும் இல்லாத எலக்ட்ரோ ஹோமியோபதி சிகிச்சை முறையை மத்திய மாநில அரசுகள் அங்கீகரிக்க வேண்டும் என தென்னிந்திய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவா்கள் சங்க தலைவர் பரத் கோவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்னிந்திய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவா்களின் நான்காவது தேசிய மாநாடு கோவையில் நடைபெற்றது..மதுரை மற்றும் கோவையில் இயங்கி வரும் மது இன்ஸ்ட்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடைபெற்ற இதில், தென்னிந்திய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கத்தின் தலைவா் பரத் தலைமை தாங்கினார்.
மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா,கர்நாடகா,உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.
இதில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் பரத்,
எந்த பக்க விளைவுகளும் இல்லாத முழுவதும் இயற்கை சார்ந்த சிகிச்சை முறையாக எலக்ட்ரோபதி சிகிச்சை இருப்பதாகவும்,மத்திய மாநில அரசுகள் இந்த சிகிச்சை முறைக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என கேட்டு கொண்டார்.கொரோனா கால நேரங்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளை இந்த சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி உள்ளதாக குறிப்பிட்ட அவர்,பல இலட்சம் மக்களுக்கு எதிர்ப்பு சக்தியை இந்த சிகிச்சையின் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எலக்ட்ரோபதி சிகிச்சையை எடுத்து கொள்ள முடியும் என கூறிய அவர்,வீட்டு பிராணிகளுக்கும்,தாவரங்களுக்கும் கூட இந்த சிகிச்சை முறை பலனளிக்கும் என தெரிவித்தார்.