August 17, 2017
தண்டோரா குழு
தென்மேற்கு பருவமழை இயல்பை விட 33 சதவீதம் அதிகம் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“தமிழகத்தில் 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை, ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை அண்ணா பல்கலையில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் 1 முதல் தற்போது வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 21 செ.மீ., பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 33 சதவீதம் அதிகம்.”
இவ்வாறு அவர் கூறினார்.