November 12, 2024 தண்டோரா குழு
கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் இன்று டோமோதெரபி ரேடிஸாக்ட் “X9” எனும் அதிநவீன கதிரியக்க சிகிச்சை கருவியை அறிமுகம் செய்தது. இதன் மூலம் தென் தமிழகத்தின் முதல் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் ஆகும்.
இந்த கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் -SNR சன்ஸ் அறக்கட்டளையின் குழுமத்தினர் மற்றும் மருத்துவர்கள் தொடங்கி வைத்தனர்.
புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சையில் அதிநவீனமாக அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்ட இந்த டோமோதெரபி ரேடிஸாக்ட் X9ன் மதிப்பு ரூ.30 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் குகன் கூறியதாவது
டோமோதெரபி ரேடிஸாக்ட் X9 என்கிற இந்த அதிநவீன கருவி மூலம் உயர் ஆற்றல் கொண்ட x கதிர்களை (X RAY) அனைத்து கோணங்களிலும் (அனைத்து 360 ° ) புற்றுநோய் கட்டியை நோக்கி செலுத்த முடியும்.இந்த கருவியின் முக்கிய சிறப்பு சிகிச்சை திட்டமிடல் மற்றும் கதிர்வீச்சு செலுத்துதல் ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவு மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படும் ஆற்றல் கொண்டுள்ளது.
மேலும் இதில் மிக உயர்ந்த தரம் கொண்ட மருத்துவ படங்களை எடுக்கக்கூடிய KVCT அமைப்பு உள்ளது. இதனால் மூலம் நோயாளியின் உடலில் உள்ள கட்டியின் அளவு,வடிவம் மற்றும் இருப்பிடத்தை துல்லியமாக குறி வைத்து கதிர்வீச்சு சிகிச்சை வழங்க முடியும்.
இந்த கருவி மூலம் ப்ரோஸ்டேட் மார்பகம்,நுரையீரல்,மூளை,தலை, கழுத்து மற்றும் அனைத்து புற்று நோய்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை வழங்கப்படும் என தெரிவித்தார்.