February 28, 2017
தண்டோரா குழு
தென் மாவட்டங்களின் கடலோரhd பகுதிகளில், மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் திங்கட்கிழமை கூறியதாவது:
“வடகிழக்கு பருவ மழைக்காலம், ஜனவரி 4-ம் தேதி முடிந்த நிலையில் தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படுகிறது. இந்நிலையில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு, வடக்கு கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்ட கடலோர பகுதிகளிலும்,லேசான மழை பெய்யலாம்.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். குறைந்த பட்சம் 23, அதிகபட்சம், 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்”.
இவ்வாறு அவர்கள் கூறினர்.