• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தெருக்களில் வழிந்தோடும் சாக்கடை நீர்: மாநகராட்சி உதவி ஆணையாளரிடம் புகார் அளித்த தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியினர்

August 29, 2024 தண்டோரா குழு

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவர் பிரின்ஸ் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 68 காந்திபுரம் ஒன்பதாவது வீதி தொடர்ச்சி மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை பொதுமக்கள் சார்பாக கோயம்புத்தூர் மத்திய மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில்குமரனிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.

அம்மனுவில் காந்திபுரம் ஒன்பதாவது வீதி தொடர்ச்சி மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை சந்திக்கும் நான்கு ரோடு பகுதியில் சாக்கடை நீர் சாக்கடை வடிகால் வாயிலாக செல்லாமல் தெருக்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் செல்வதாகவும் சம்பந்தப்பட்ட இந்தப் பகுதியில் இரண்டு மழலையர் பள்ளி, மருத்துவமனை மற்றும் 95 சதவீதம் குடியிருப்பு பகுதியாக இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதாகவும் பெரும் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் மேலும் அந்தப் பகுதியில் வாகன ஓட்டிகளால் நடந்து செல்பவர்கள் மீது சாக்கடை தண்ணீர் தெளிக்கப்பட்டு நடந்து செல்பவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் காந்திபுரம் ராதாகிருஷ்ணன் சாலை முழுவதும் சாக்கடை வடிகால் முழுவதும் தூர்வாரினால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது இது தொடர்பாக வார்டு அளவில் சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த பலனும் கிட்டாத சூழ்நிலையில் கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையரை நேரில் சந்தித்து இந்த புகார் மனுவினை அளித்ததாக தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவர் பிரின்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க