September 8, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை உக்கடம் பெரியகுளத்தில் பேஸ்-1 பகுதியில் 3.85 கி.மீட்டர் தூரத்திற்கு சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் குளக்கரையினை அழகுபடுத்துவதற்காக குளம் புனரமைத்து, சீரமைக்கும் பணிகளையும் குறிச்சி குளத்தை சுற்றி புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப்பணிகளையும் மாநகராட்சி கமிஷனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், உக்கடம் புல்லுக்காடு பகுதியில் 24×7 குடிநீர் திட்டத்தின்கீழ் உக்கடம் பிஎஸ்யுபி பகுதியில் குடிநீர் திட்டப்பணிகளுக்காக ரூ.2.5 கோடி மதிப்பீட்டில், 22 லட்சம் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதை ஆய்வு செய்து மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சமந்தப்பட்டு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, செயற்பொறியாளர் தஞானவேல், தெற்கு மண்டல உதவி கமிஷனர் சுந்தாராஜன். உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி. உதவி பொறியாளர் சரவணக்குமார், 24 மணிநேர குடிநீர் திட்ட மேலாண்மை ஆலோசகர் குழுத் தலைவர் கோபாலகிருஷ்ணன். மண்டல சுகாதார அலுவலர் ராமு மற்றும் உதவி பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.