• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தெலுங்கானா மற்றும் தமிழக மாநிலங்களை தொழில் மேம்பாட்டில் இணைக்க இளைஞரின் புதிய முயற்சி

October 3, 2022 தண்டோரா குழு

தமிழகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர்கள் ,மற்றும் சுய தொழில் ஆர்வலர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரை இணைத்து ஸ்டார்ட் பயணமாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்து கொள்ள ஸ்டார்ட் பயணம் செல்லும் கோவையை சேர்ந்த இளைஞரின் புதிய முயற்சி18 நாடுகளில் ஐம்பாதயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களை கொண்டு ஓர் தொழில் கூட்டமைப்பாக ஸ்டார்ட் அப் பயணம் செயல்பட்டு வருகிறது.

கல்லூரி மாணவ,மாணவிகளின் புதிய முயற்சியை தொழில் நிறுவனமாக மாற்றி இதில் இளம் தொழில் முனைவோர்களாக உருவாக்கி வரும் இதில்,.கோவையை அடுத்த பொள்ளாச்சியை சேர்ந்த இளைஞர் நவீன் கிருஷ்ணா, ஸ்டார்ட் அப் பயணம் வாயிலாக 9 edition நடத்தி,97 தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ளார். 237 மாணவர் தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ள,இவர், தற்போது. புதிய முயற்சியாக,இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முன்னோடி மாநிலமான தெலுங்கானாவிற்கு தமிழகத்தை சேர்ந்த இளம் தொழில் முனைவார்களை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

ஸ்டார்ட் அப் டி பயணம் (Startup-T-Payanam) என தெலுங்கானாவிற்கு செல்லும் இந்த குழுவில் பெண்களும் இடம் பெற்றுள்ளதாகவும்,. தெலுங்கானாவிற்கு சென்று அங்கு ஒரு 50க்கும் மேற்பட்ட முதன்மை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து அங்குள்ள புதிய தொழில் யுக்திகளை பற்றி அறிந்து ஒரு கலந்தாய்வு செய்து அதை நம் மாநிலத்தில் எப்படி செயல்படுத்துவது என்பதை பற்றிய ஒரு ஒரு பயிற்சி பயணமாக இந்த ஸ்டார்ட் அப் டி பயணம் செல்வதாக தெரிவித்தார்.

அந்த மாநிலத்தில் பல்வேறு சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் எனப்படும் கூட்டமைப்பின் தொழில் யுக்திகளை தமிழகத்தில் செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்காக இன்னொரு மாநிலத்திற்கு தமிழக இளம் தொழில் முனைவோர்களை அழைத்து செல்லும் இளைஞர் நவீன் கிருஷ்ணாவின் முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க