February 15, 2017 தண்டோரா குழு
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ‘பிஎஸ்எல்வி சி37’ ராக்கெட் 104 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளை இந்திய பிரதமர் பாராட்டியுள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் மையத்திலிருந்து புதன்கிழமை (பிப்ரவரி 15) காலையில் ‘பிஎஸ்எல்வி சி37’ ராக்கெட் 104 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்து உலக சாதனை படைத்துள்ளது.
“பிஎஸ்எல்வி சி37 ராக்கெட் 104 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய விண்வெளி நிறுவனத்தின் அணியைப் பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாகப் பாராட்டியுள்ளார்” என்று ‘இஸ்ரோ’ தலைமை அதிகாரி ஏ.எஸ். கிரண் குமார் கூறினார்.
இந்தியப் பிரமதர் தன்னுடைய ட்விட்டரில், “பிஎஸ்எல்வி சி37 ராக்கெட், கார்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் 1௦3 நானோ வகை செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். இஸ்ரோவின் இந்த குறிப்பிடத் தக்க சாதனை நமது விண்வெளி சமுகம் மற்றும் நாட்டிற்கு ஒரு பெருமையான தருணம் ஆகும். இந்தியா நமது விஞ்ஞானிகளை மரியாதையுடன் வணங்குகிறது” என்று பதிவிட்டிருந்தார்.