August 18, 2017
தண்டோரா குழு
இந்திய தேசியக் கொடியை அவமதித்ததாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மீது புகார் எழுந்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் அணிந்து, அதன் மேல்,இந்திய தேசியக் கொடியின் நிறத்தில் துப்பட்டா அணிந்துக்கொண்டு, அதை பறக்க விடுவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அதைக் கண்டித்து, அவருக்கு எதிராக தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தேசியக் கொடியை அவமதிக்கும் விதத்தில் புகைப்படத்தை வெளியிட்டதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.