October 18, 2023 தண்டோரா குழு
அண்மையில் கோவாவில் கோவா மற்றும் சர்வதேச யூத் யோகா பெடரேஷன் சார்பாக இரண்டாவது தேசிய அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றன.இந்த போட்டியில் தமிழகம், பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா,கர்நாடாகா,மற்றும் கோவா என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், சிறு குழந்தைகள் கலந்து கொண்டனர்.
பொது பிரிவு, சிறப்பு பிரிவு மற்றும் ஆர்டிஸ்டிக் ரிதமிக் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வயது அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றன.இதில் தமிழகம் சார்பாக கலந்து கொண்ட கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கோட்டூர், மலையாண்டிபட்டணம் பகுதியில் உள்ள பர்ப்பிள் டாட்ஸ் பள்ளியை சேர்ந்த மழலை குழந்தைகள் ஒட்டு மொத்தமாக அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
இந்நிலையில் கோவை விமான நிலையம் திரும்பிய தலைமை பயிற்சியாளர் அகிலாண்டேஸ்வரி மற்றும் குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து விமான நிலையத்தில் பொதுமக்கள் முன்னலையில் மழலை குழந்தைகள் அனைவரும் வியக்கும் விதமாக பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் கனகதாரா,தாளாளார் கவுதம்,பயிற்சியாளர் யோகிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதே பள்ளியை சேர்ந்த குழந்தைகள் மாவட்ட,மாநில அளவிலான யோகா போட்டிகளில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடதக்கது.