April 3, 2017 தண்டோரா குழு
தேச துரோக வழக்கில் வைகோவை 15 நாள் நீதிமன்ற காவலில்வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009 ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது மதிமுக பொதுச்செயளாளர் “குற்றம் சாட்டுகிறேன்” என்ற தலைப்பில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை எழுப்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கான வந்தது. இதையடுத்து, வைகோவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வைகோ ஜாமீனில் செல்ல விருப்பம் இல்லை என்றதால் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.