August 4, 2017 தண்டோரா குழு
தேடப்படும் நபராக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஐ.என்.எக்.ஸ் நிறுவனத்திற்கு அந்நிய முதலீடு அனுமதி பெற்றுத் தந்ததில் முறைகேடு நடந்துள்ளதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது புகார் வந்ததையடுத்து அண்மையில் அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கார்த்தி சிதம்பரம் மீது மத்திய அரசிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் அவர் வெளிநாடுக்கு செல்லாமல் இருக்க தேடப்படும் நபராக அறிக்கை வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதகாவும் கூறப்படுகிறது.
இதனிடையே கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக விமான நிலையங்களுக்கு சுற்றக்கையும் உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் இந்த சுற்றக்கையை உள்துறை அமைச்சகம் ரத்து செய்ய வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.