May 20, 2017
தண்டோரா குழு
ஆர்.கே.நகர் மறுதேர்தல் தேதிக்காகவும் தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல்துறையினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று தில்லி கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
நீதிமன்றத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகு மறுதேர்தல் குறித்து தினகரனும், சுகேஷ் சந்திரசேகரும் பேசிய ஆடியோ பதிவு தங்களிடம் உள்ளதாக தில்லி காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
மேலும் ஆர்.கே.நகர் மறுதேர்தல் தேதி 5 என்ற எண்ணில் வருமாறு ஏற்பாடு செய்யும் படி தினகரன் சுகேஷ் சந்திரசேரிடம் பேசிய ஆடியோ பதிவும் உள்ளதாக காவல்துறையினர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.