October 5, 2021 தண்டோரா குழு
கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் நாளை (புதன்கிழமை) மற்றும் 9 -ந் தேதி (சனிக்கிழமை) அன்று கோவை உள்பட 28 மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135-பியின் படி தேர்தல் நடைபெறும் நாட்களில், சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் கமிஷனர் பொன்னுச்சாமி மற்றும் இணை கமிஷனர் லீலாவதி ஆகியோர் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் உள்ள அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்.
மேலும் தேர்தல் குறித்து தொழிலாளிக்கு விடுப்பு வழங்கப்படுவது தொடர்பாக பெறப்படும் குறைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வணிகர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.