February 10, 2022
தண்டோரா குழு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் கோவை மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் கோவை சிவானந்தாகாலணி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது ஓ.பி.எஸ் பேசுகையில்,
கொங்கு மண்டலம் அதிமுக வின் எங்கு கோட்டையாக விளங்கி வருகிறது 2011 ல் கோவையில் நடைபெற்ற அதிமுக சார்பில் நடைபெற்ற மாநாடு ஆட்சியை பிடிக்க அச்சாரமாக அமைந்தது.மக்கள் பயனடையும் திட்டங்களை செயல்படுத்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுக ஆட்சியில் அமல்படுத்திய திட்டங்கள் எப்போதும் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வந்தபோதும் மக்கள் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
100 யூனிட் மின்சாரம் இலவசமாக அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.மாணவர்களுக்கு 16 வகையான கல்வி உபகரணங்கள், மடிக்கணினி வழங்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேரிடர் காலங்களில் விரைந்து செயல்ட்டது. அதிமுக ஆட்சி கொரோனா காலத்தில் திமுக மக்களை கண்டுகொள்ளவில்லை
திமுக சார்பில் எந்த நிர்வாகியும் மக்களுக்கு உதவவில்லை காவிரி பிரச்சனைக்கு சட்ட போராட்டம் நடத்தி தீர்வை கொண்டுவந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகால வளர்ச்சி என்பது 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இருந்தது. தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் காப்பாற்றப்படவில்லை.
பொங்கல் தொகுப்பு தரமற்ற பொருள் என விசாரணை கமிஷனில் நிருபனமாகியுள்ளது.
உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் அனைத்து வார்டுகளிலும் அதிமுக வெற்றி பெரும்
நகைக்கடன் தள்ளுபடி செய்யாததால் தமிழகத்தில் 50 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர்.பொங்கள் தொகுப்புடன் 2500 ரூபாய் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டது திமுக சார்பில் கொடுக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் தரம் இல்லை என தெரிவித்தார்.