December 16, 2017 தண்டோரா குழு
கெயில் பைப்லன் திட்டத்தால் ஏழு மவாட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் கட்சி,மதம் சார்பற்ற விவசாய சங்கங்களின் சார்பாக கோவையில் தனியார் அரங்கில் நடைபெற்றது.
இதன் பின்னர் செய்தியாளர்களை கட்சி சார்பற்ற விவசாயிகள் அணியை சேர்ந்த கந்தசாமி கூறுகையில்,
தமிழக அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழுவின் பரிந்துரையை ஏற்று, வாளையார் முதல் ஓசூர் வரையுள்ள விவசாய நிலங்களில் குழாய் அமைப்பது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்ய வேண்டும். தமிழக அரசு விவ்சாயிகள் மற்றும் ஏழு மாவட்ட அதிகாரிகள் கொடுத்த அறிக்கையை மத்திய அரசு செயல்படுத்த முன் வர வேண்டும். எந்தவித ஆய்வும் செய்யாமல் கெயில் கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் பி.என்.பி சட்டத்தின் படி 1000க்கும் 100 ரூபாய் அடிப்படையில் ஈழப்பீடு வழங்கப்படுகிறது. இதில் 100 ரூபாயில் 30 சதவிகிதம் அதிகரித்து தருவதாக கெயில் கூறுவது 1000 க்கும் 130 ரூபாய்தான் கிடைக்கும். என்பதை கெயில் நிறுவனம் மறைத்து விவசாயிகளை வஞ்சித்து வருவதாக கூறினார். மேலும் விவசாயிகள் கெயில் திட்ட பாதைக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, தோற்று விட்டதாக பொய்யான தகவலை கெயில் நிறுவனம் பரப்பி வருகிறது. கெயில் நிறுவனம் கொடுத்த தவறான தகவலை நடைமுறைப்படுத்தாமல் இருக்க, மத்திய மாநில அரசுகளுக்கும் கெயில் குழாயால் பாதிக்கப்பட்ட விவ்சாயிகளின் குறைகளை கேட்டறிந்து, அவர்கள் கூறும் கருத்துகளை வீடியோவாக எடுத்து அனுப்ப இருப்பதாக தெரிவித்தார்.
கெயில் திட்டத்தை விவசாய சங்கங்கள் எதிர்க்கவில்லை, உயர் நீதிமன்ற ஆணையின்படி அரசு நிலத்தின் வழியாக கொண்டுவர வேண்டும். முடியாத பட்சத்தில் தான் விவசாய நிலங்களில் கொண்டு வரலாம் என்பதை கெயில் நிறுவனம் பின்பற்ற வேண்டும். அதை விடுத்து விவசாய நிலங்களில் கொண்டு வருவதை வன்மையாக கண்டிப்பதாக கூறினார்.
அதைபோல், தமிழக பாஜக வினர் கெயில் குறித்து விவசாயிகளிடம் தெளிவுபடுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு விவசாயிகளை குழப்புவதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சட்டிய அவர்
மின்சார கோபுரம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விவசாய நிலங்களில் பயன்படுத்தும்போது ஈனத்தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. அப்படி வழங்கப்படும்போது நிலத்தின் சுவாதீனம் நிறுவனங்களை சார்ந்தது. இதில் நிலத்தின் பாதுகாப்பு விவசாயியை சாறும் என்பதால் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். தமிழக அரசு விவசாயிகளுக்கு சாதகமாக எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கவில்லை, போராடக்கூடிய நிலைக்கும் விவசாயிகள் தள்ளப்படவில்லை, தேவைப்பட்டால் பாஜக விவசாயிகளும் எங்களோடு இணைந்து போராடுவார்கள் என்றார்.