May 17, 2016 தண்டோரா குழு.
கனடாவின் ஒன்டாரியோ நகர்த்தை சேர்ந்தவர் ரூபின்ஸ்டேன் கில்பர்ட், 23வயது பெண்மணி. குளோபல் போசிசனிங் சிஸ்டம் (GPS) என்ற செல்போன் அமைப்பின் உதவியுடன், காரை ஓட்டி சென்றபோது ஏரிக்குள் விழுந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
உலகமே வியப்பாக கருதும் செல்போன் அமைப்பு (GPS) குளோபல் பொசிசனிங் சிஸ்டம். இந்த அமைப்பு நமது அலைபேசியில் இருந்தால், நாம் இருக்கும் இடத்தை கூகுள் உதவியுடன் கண்டறிய முடியும்.
அதுமட்டுமல்லாது, நாம் ஏதாவது ஒரு இடத்தை குறிப்பிட்டால், நாம் இருக்கும் இடத்திலிருந்து அந்த இடத்திற்கு செல்ல வழிகாட்டும். ப்ரூஸ் பெனின்சுலா என்ற வழித்தடத்தில், கில்பர்ட் என்பவர் செல்ல வேண்டி இருந்தது.
சில காரணங்களால் அந்த பாதை தற்காலிகமாக வேறு வழித்தடத்துக்கு மாற்றப்பட்டது. மேலும் அந்த மாற்றம் கூகுளில் குறிக்கப்படவில்லை. இதனால் அந்த அமைப்பு தவறான வழியைக் காட்டியது. இதனை அறியாமல் கில்பர்ட் காரை ஓட்டி சென்றார். அப்போது ஹூரான் என்ற ஏரிக்குள் கில்பெர்டும், அவரது காரும் விழ நேரிட்டது.
பின் தனது காரின் ஜன்னல் வழியாக வெளியேறி, சுமார் 30 மீட்டர் நீந்தி கரையேறினார். இதைப் பற்றி உள்ளூர் காவல் அதிகாரி கூறும்போது, அதிகப்படியான ஓட்டுனர்கள் இவ்வாறு GPS மூலம் தவறாக வழி காட்டப்பட்டு பாதிப்பு அடைகின்றனர் என தெரிவித்தார்.
அறிவியலிடமும், தொழில் நுட்ப வளர்ச்சியிடமும் வாழ்கையை ஒப்படைக்கும் முன் மனிதர்கள் சற்று யோசித்து செயல்பட வேண்டும் என்பதையே இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.