November 25, 2022
தண்டோரா குழு
மின்சார உயர்வை கண்டித்து கோவையில் நடைபெறும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் உண்ணாவிரத போராட்டத்திற்கு பாஜக முழு ஆதரவு அளித்துள்ளனர்.
தமிழக அரசின் 54 சதவீத மின்சார உயர்வை கண்டித்து இன்று கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் மற்றும் கதவடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் முழு ஆதரவை தெரிவிக்கும் வகையில் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மற்றும் மாநில துணைத்தலைவர் கோவை பார்வையாளர் கனகசபாபதி, மாநிலத் தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் டாடாபாத் பவர் ஹவுஸ்பகுதியில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு வந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.