October 10, 2022 தண்டோரா குழு
தொழில் நிறுவனங்கள் சிக்கனமாக உற்பத்தி முறையை கையாள என மத்திய அரசின் வர்த்தக துறையின் முன்னாள் செயலாளர் ராஜீவ் கிர் கூறியுள்ளார்.
இந்திய தொழில் வர்த்தக சபையில் மாதத்திர கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் இந்திய மற்றும் வெளிநாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்திய அரசின் வர்த்தக துறையின் முன்னாள் செயலாளர் ராஜீவ் கிர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை தலைவர் ஸ்ரீராமலு தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சில் ராஜீவ் கிர் பேசுகையில்,
தொழில் நிறுவனங்கள் உற்பத்தி பொருட்களை சிக்கன நடைமுறையில் உற்பத்தி செய்ய வேண்டும்.இந்தியா மற்றும் பிற நாடுகளோடு ஏற்பட்டுள்ள தொழில் கொள்கைகள் கடந்த 2001 ஆண்டு முதல் முரண்பாடாக உள்ளது.தொழில் நிறுவனங்கள் மானியங்கள் கேட்பது தள்ளுபடி கேட்பதை வழக்கமாக வைத்துள்ளது.இவற்றை மாற்று சிந்தனையாக தொழிற்சாலைகளில் உற்பத்தி பொருட்களை சிக்கனமாக நாம் நடைமுறைப்படுத்தினால் நாம் வெற்றி பெறலாம்.
மோட்டார் வாகன உற்பத்தியில் உலகிலேயே நாம் தான் சிறிய கார் உற்பத்தியில் முதலிடம் பெற்று வருகிறோம்.பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா சிறிய ரக கார்களை குறைந்த விலையில் தரமாக தயாரித்து மக்களுக்கு ஏற்ற வசதிக்கேற்ப உற்பத்தி செய்து வருவது பெருமைப்படக்கூடியது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் கோவையை சேர்ந்த தொழில் நிறுவங்களின் அதிபர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.நிறைவில் செயலாளர் அண்ணாமலை நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியில்தொழில் துறையில் தற்போது உள்ள சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.