March 20, 2023 தண்டோரா குழு
தமிழ்நாடு சிறு,குறு தொழில்கள் சங்கம் மாவட்ட துணை தலைவர் சுருளிவேல் பட்ஜெட் குறித்து கூறியிருப்பதாவது:
மிழ்நாடு பட்ஜெட் 2023-24
வரவேற்பு அறிவிப்புகள்:சென்னை, கோவை மற்றும் ஓசூரில் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரம், கோவைக்கு மெட்ரோ ரயில், சிறப்புத் திட்டத்தின் மூலம் தொழில் 4.0க்கு ரூ.2877 கோடி ஒதுக்கீடு, தொழில் நகரங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான மொபைல் உதவி மையம்,மூலதன மானியம் 300 கோடி மற்றும் கடன் உத்தரவாதம் 100 கோடி ஒதுக்கீடு, கோவை, பெரம்பலூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் அறிவிப்பு, எம்எஸ்எம்இ.க்கு மொத்த ஒதுக்கீடு ரூ.911.50 கோடி போன்றவைகள் வரவேற்கப்படுகின்றன.
எம்எஸ்எம்இ துறைக்கு ரூ.1500 கோடி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் ஒதுக்கீடு குறைவாக உள்ளது,
ஏற்கனவே கோவையில் ஒரு தொழிலாளர் தங்கும் விடுதி வரவிருக்கிறது, மற்ற மாவட்டங்களிலும் நாங்கள் கோரிக்கை விடுத்தோம் ஆனால் இது பற்றிய அறிவிப்பு இல்லை, டி.ஐ.ஐ.சி. கட்டணங்கள் குறைக்கப்படவில்லை, வட்டி விகிதத்தை 6 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம் ஆனால் இது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை,2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரி தொடர்பான வழக்குகளுக்கு பொது மன்னிப்புத் திட்டத்தைக் கோரினோம், அது அறிவிக்கப்படவில்லை, இது ஏமாற்றம் தரும் அம்சங்களாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.